இது கேலிக்கூத்தானது! சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஆதங்கப்பட்ட பிரபல தமிழ்ப்பட நடிகர் பிரசன்னா

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பதாகையை அச்சடித்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இது கேலிக்கூத்தானது என நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதி வழியாக நேற்று மாலை 3 மணி அளவில் சுபஸ்ரீ (23) என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அந்த சாலையில் அதிமுக கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பதாகைகளை வைத்திருந்த நிலையில் ஒரு பதாகை சுபஸ்ரீ மீது சரிந்ததில் அவர் நிலைதடுமாறி கீழே விழ அவர் பின்னால் வந்த லொறி மோதியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த பதாகையை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது பதாகை வைக்க சொன்னவரையும் அவர் சார்ந்துள்ள கட்சி தலைமை மீதும் நடவடிக்கை எடுக்காமல் அச்சக நிறுவனத்தை மூடுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இனி இனிமே ஹெல்மெட் போடாதவனுக்கு அபராதம் போடாதீங்க, அவன் ஓட்டிட்டு வந்த பைக் கம்பெனிகாரனுக்கு போடுங்க என சிலர் கோபத்துடன் பதிவிட்டுள்ளனர்.

இதோடு பேனரை அச்சடித்த பிரிண்டிங் பிரஸ்கு சீல் வைத்த மாதிரி மது அருந்த காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்குமா இந்த அதிகாரிகளும் அரசாங்கமும் என கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் பிரசன்னா, அச்சக நிறுவனத்தை மூடுவது கேலிக்கூத்தான செயல் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்