வெளிநாட்டுக்கு சென்ற மூன்றாவது மனைவி! ஐந்து பேரை மணந்தும் ஆசை தீரவில்லை.. கணவன் செய்த கொடூர செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்த நபர், தனது மூன்றாவது மனைவியின் ஐந்து வயது மகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் ஷான்பாஷா (50). இவர் பெண்களை காதல் வலையில் விழ வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும் அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வாழ்க்கை கொடுப்பதாக கூறி இதுவரை 5 பெண்களை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஷான்பாஷாவின் 3வது மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவரது 5 வயது பெண் குழந்தை, ஷான்பாஷாவின் தங்கை வீட்டில் வளர்ந்து வந்தாள். அந்த சிறுமியை இரவு நேரத்தில் மட்டும் தன் வீட்டுக்கு அழைத்து வருவதை ஷான்பாஷா வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் குடிபோதையில் வீட்டிற்கு செல்லும் ஷான்பாஷா, தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த அந்த சிறுமி காலையில் தனது அத்தை வீட்டிற்கு சென்றபோது வலியால் துடித்து அழுதுள்ளது.

இதையடுத்து மருத்துமனைக்கு சிறுமியை அழைத்து சென்ற போது அவளுக்கு நடந்த கொடூரம் தெரியவந்தது.

இது குறித்து பொலிலில் புகார் தரப்பட்ட நிலையில் பொலிசார் ஷான்பாஷாவை பிடித்து விசாரித்த போது தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் ஷான்பாஷா வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்த போதே ஷான்பாஷாவுக்கு பொலிசார் பாடம் புகட்டியிருக்க வேண்டும்.

ஆனால் அதை செய்யாததால் தான் தனது மகளிடமே அத்துமீறியுள்ளார் என ஆதங்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...