தமிழகத்தில் 41 பேருடன் ஆற்றில் கவிழ்ந்த படகு.. மூவர் மாயம்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில், 41 பேருடன் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 38 பேர் மீட்கப்பட்ட நிலையில் மூன்று பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

அரியலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள தீவான ராமநல்லூரில், மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது.

இதில் கலந்துகொள்ள கபிஸ்தலம் பகுதியில் குடிகாடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 41 பேர் படகில் சென்றனர்.

அவர் மீண்டும் திரும்பும்போது படகின் மோட்டார் திடீரென பழுதானதால், படகோட்டியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் பயந்து கூச்சலிட்டு தடுமாறியதால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

படகில் இருந்த 41 பேரும் ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் சென்றது. விரைந்து வந்த அவர்கள், பொதுமக்களின் உதவியுடன் 16 பேரை மீட்டு பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், மேல் சிகிச்சைகாக அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், 38 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மூதாட்டி ஒருவர் உட்பட மூன்று பேரைக் காணவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

அவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களுடன், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்