24 வயதிலேயே விதவையான இளம் பெண்.. இரவு நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறி செய்த விபரீத செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 24 வயதிலேயே விதவையான இளம்பெண் தனது குழந்தையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் நிர்மலா (24). இவரது மகள் ஹரிதா (5). நிர்மலாவின் கணவர் மலர்வணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

கணவன் இறந்து விட்டதால் நிர்மலா தினமும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இருந்தாலும் போதிய வருமானம் இல்லை என்று தெரிகிறது.

ஹரிதா தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் பெண் குழந்தையை எப்படி படிக்க வைப்பது என்பதை நினைத்து நிர்மலா மன வருத்தம் அடைந்தார்.

இதுவே அவருக்கு மன அழுத்தமாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிர்மலா, மகள் ஹரிதாவை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி ஊட்டி ஏரிக்கு சென்றார்.

பின்னர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் ஏரியில் அவர்கள் இருவரின் சடலங்கள் நீரில் மிதப்பதை பார்த்து படகு இல்ல ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இரு உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக நிர்மலா தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து மேலும் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்