மகள் திருமணம் நடப்பதில் தாமதம்... நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு

Report Print Basu in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 25ம் திகதி அன்று 1 மாத பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நளினி, மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் 3வாரங்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இப்போது அவர் அக்டோபர் 15 வரை கூடுதல் நீட்டிப்புக்காக நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவுக்கு உதவியாக நளினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், பிரித்தானியாவில் வசிக்கும் தனது மகளின் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய நீதிமன்றம் ஒரு மாத காலம் பரோல் வழங்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பரோலில் விடுவிக்கப்பட்ட நாள் முதல் வேலூரில் உள்ள சத்துவாச்சாரியில் தனது அம்மாவுடன் சேர்ந்து தங்கியிக்கும் நளினி, மளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

விசா தொடர்பான பிரச்னைகளால் இலங்கையிலிருந்து மாமியார் வருகையின் தாமதத்தின் விளைவாக திருமணம் நடைபெறாததற்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ள நளினி.

அவரது மாமனார் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நபர் என்பதால், திருமணத்தில் அவரது மாமியார் இருப்பது முக்கியம் என்று நளினி தெரிவித்துள்ளார்.

வயதான மாமியார் விரைவில் விசாவைப் பெற்று செப்டம்பர் மூன்றாம் வாரத்திற்குள் இந்தியாவுக்கு வருவார் என்று உறுதியளித்த மனுதாரர், அக்டோபர் 15ம் திகதி வரை தனது பரோலை நீட்டிக்க கோரி நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிறை அதிகாரிகளுக்கு செப்டம்பர் 4ம் திகதி அனுமதி கோரியிருந்த நிலையில், செப்டம்பர் 5ம் திகதி சிறை அதிகாரிகள் அதை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நளினி மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பரோலை நீட்டிக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்