நீங்க தமிழனா? இந்தியரா? உலகையே திரும்பி பார்க்க வைத்த சிவன் அளித்த பதிலால் குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா

உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழன் சிவனிடம், நீங்கள் இந்தியரா, தமிழரா என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து நிலவுக்கு சமீபத்தில், சந்திரயான்-2 ஏவப்பட்டது. நிலாவிற்கு 2.1 கி.மீற்றர் தொலைவு இருந்தபோது, விக்ரம் லேண்டர், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

கடைசிகட்ட தவறுகளால் விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தது. கடுமையாக உழைத்து கடைசி கட்டத்தில் இப்படி நடந்துவிட்டதே என்று இஸ்ரோவின் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சிவன், பிரதமர் மோடியிடம் கண்ணீர் வடித்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி தமிழர்களை பெருமைப்பட வைத்துவிட்டார் என்று ஒரு புறம் சமூகவலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சிவனிடம் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அதில், ஒரு தமிழனாக நாட்டின் உயர்ந்த பதவி ஒன்றில் அமர்ந்துள்ளீர்கள், தமிழ்நாடு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், முதலில் நான் இந்தியன். ஓர் இந்தியனாகவே இஸ்ரோவில் பணியில் அமர்ந்தேன். இஸ்ரோவில், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் பணி செய்கிறார்கள். பல மொழி பேசும் மக்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கிறார்கள் என்று கூறினார்.

சிவனின் இந்த பதில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஜாதி, மதம், இனம் பார்க்காமல், நாம் ஒரு இந்தியன் என்று நினைத்தால் போது, அதற்கு சிவனின் இந்த பதிலே சரி என்று கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்