தண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைக்குழந்தை உட்பட மூன்று பேரின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மூன்று பேரின் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரயில்வே பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் பொலிஸார் அந்த இடத்திற்கு செல்லவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர், கைக்குழந்தை மற்றும் அதன் பெற்றோரின் சடலம் கிடப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

மூன்று பேரும் குழந்தையின் சிகிச்சைக்காக சேலம் சென்றுவிட்டு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்களா? அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா? என்பது பொலிஸார் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்