மனைவிக்கு பிறந்த மகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற இரண்டாவது கணவன்... அதிரவைத்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் நான்கு வயது குழந்தையை மிக கொடூரமாக சித்ரவதை செய்து மற்றும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இரண்டாவது கணவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ், பவானி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து மணந்த நிலையில் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகளும், 1 வயதில் மகனும் இருந்தனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷை பிரிந்த பவானி, அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞரை 2வது திருமணம் செய்து கொண்டு, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது மகள் யாழினிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி, தனியார் மருத்துவமனைக்கு பவானி கொண்டுச் சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த முதல் கணவர் ரமேஷ் தனது குழந்தையின் முதுகு, கழுத்து, மற்றும் வயிறு பகுதிகளில் காயங்கள் இருப்பதால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் புகார் அளித்தார்.

இதனால் பவானியின் 2வது கணவர் ஆசிபை பிடித்து பொலிசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் யாழினியை பலாத்காரம் செய்ததோடு, உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் அடிவயிறு, கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும் குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்தும் கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆசிப்பை பொலிசார் கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers