புதிதாக திருமணமான தம்பதியினருடன் சீமான் செய்த நெகிழ்ச்சி செயல்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகம் முழுவதும் இருக்கும் ஏரிக்கரையோரங்களில் பனை விதைகளை நடும் நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமணமான புது தம்பதியருடன் இணைந்து பனை விதைகளை நட்டார்.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள ஏரிக்கரையோரங்களில் பனை விதைகளை நட முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இன்றைய தினம் ‘பனைத் திருவிழா’ நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சோழிங்கநல்லூரில் இருக்கும் நாராயணபுரம் ஏரிக்கரையில் பனை விதையை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது இன்று காலை திருமணமான சந்தோஷ்-மஞ்சு ரேகா தம்பதியினர் சீமானுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பலர், ஏரிக்கரை ஓரங்களில் பனை விதையை நட்டு வைத்தனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் இருக்கும் அக்கட்சியை சார்ந்தவர்கள், அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏரிக்கரைகளில் பனை விதையை நட்டு வருகின்றனர். பலகோடி பனை திட்டத்தின் முன்னெடுப்பாக, இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நட இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறுகையில், ‘பனை மரம் தமிழர்களின் தேசிய மரமாக இருக்கிறது. அது மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை வளப்படுத்துகிறது. பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை செய்கிறோம்’ என தெரிவித்தார்.

மேலும், சந்திரயான்-2 குறித்து பேசிய அவர் ‘இதை தோல்வியாக கருத தேவை இல்லை, இந்த முயற்சியே நம் விஞ்ஞானிகளுக்கு வெற்றி தான்’ என தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்