நண்பரின் வீட்டிற்கு வந்து 3 வயது மகளை தூக்கிச் சென்ற நபர்.. செய்த கொடூர செயல்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மும்பை நகரில் நண்பரின் 3 வயது மகளை, மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை கொலாபா பகுதியில் வசித்து வருபவர் அனில் சுகானி(40). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், அசோகா எனும் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இவருடைய நண்பரின் மகள் ஷனயா(3). நேற்றைய தினம் இரவு ஏழு மணியளவில் ஷனயா அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அனில் சுகானி, தனது நண்பரின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் தேநீர் எடுத்து வர சென்ற சமயத்தில், அவரின் மகள் ஷனயாவை அனில் தூக்கிச் சென்றுள்ளார்.

பின்னர், 7வது தளத்தில் இருந்து குழந்தை ஷனயாவை அவர் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த குழந்தை ஷனயா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

அதனைத் தொடர்ந்து அனில் சுகானியை கைது செய்த பொலிசார், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டது ஏன்? அவருக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா? என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்