அதிவேகத்தில் வந்த ரயில்முன் திடீரென பாய்ந்த இளம்பெண்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் அதிவேகத்தில் வந்த ரயில்முன் திடீரென பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமையன்று டெல்லி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 26 வயதுள்ள பெண் நடைபாதையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ரயில்முன் திடீரென குதித்து தற்கொலை செய்துகொண்ட வீடியோ காட்சி, அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

இறந்தவர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் கணக்காளராக பணியாற்றிய மீனாட்சி கார்க் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றியுள்ள பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையின் போது, இறந்தவரின் குடும்பத்தினர் சில அறியப்படாத காரணங்களுக்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்