மகளுக்கு 29 வயசாகி விட்டதே என திருமணத்துக்கு நிச்சயம் செய்த பெற்றோர்.. அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோயம்பேட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60). இவரது மகள் பிரியங்கா (29). பட்டப்படிப்பு முடித்தவர்.

நேற்று முன்தினம் இரவு அறைக்குள் சென்ற பிரியங்கா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது பிரியங்கா தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரியங்காவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பிரியங்காவிற்கு 29 வயதாகிவிட்டதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளையை பார்த்து உள்ளனர்.

வரும் 9ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் பிரியங்காவிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்துவந்த பிரியங்கா தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கிறதா என விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்