நெருங்கிய திருமணம்... திடீரென மாயமான மணப்பெண் அலிபாத்திமா!

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரியில் திடீரென மணப்பெண் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷாஜகான் (60) என்பவரின் மகள் அலிபாத்திமா. இவருக்கு இன்று திருமணம் நடைபெற நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இவர் கடந்த 4ம் திகதியன்று கடைக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஷாஜகான் தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் நாட்கள் கடந்தும் கூட மகள் கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மாயமான மணப்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்