7 தமிழருக்கு ஆதரவாக வாதாடிய பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மரணம்!

Report Print Vijay Amburore in இந்தியா

நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதித்து அனைவராலும் அறியப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார்.

1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார்.

உச்சநீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக பணியாற்றிய ராம்ஜெத் மலானி 2ஜி அலைக்கற்றை வழக்கு, 7 தமிழர் விடுதலை வழக்கு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் வழக்கறிஞர்களின் ஒருவராக ராம்ஜெத்மலானி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய 95 வயதில் வீட்டில் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்