தமிழ்ப்பெண்ணுக்கு வெளிமாநிலத்தில் கிடைத்த மாபெரும் கவுரவம்.. ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை!

Report Print Kabilan in இந்தியா

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக இன்று பதவி ஏற்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜ.கவின் தலைவராக உள்ளார். வரும் டிசம்பர் மாதம் அவரது பதவிகாலம் முடிவடையும் நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக இன்று பதவி ஏற்றார். ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஆளுநராக பொறுப்பெற்றுக் கொண்டார்.

அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்