கண் பார்வை இல்லாத நிலையில் லொட்டரி சீட்டு விற்று வந்தவருக்கு 42 வயதில் அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் நன்றாக படித்திருந்தும் கண் தெரியாத காரணத்தால் சாலையில் லொட்டரி சீட்டு விற்று வந்த நபருக்கு 42 வயதில் அரசாங்க பணி கிடைத்துள்ளது.

வேலாயுதன் என்ற நபருக்கு சிறு வயதிலிருந்தே பார்வை குறைபாடு இருந்தது.

நான்காம் வகுப்பு படிக்கும் வரை ஒரு கண்ணில் மட்டும் அவருக்கு பார்வை இருந்த நிலையில் பின்னர் முற்றிலும் கண் பார்வையை இழந்தார்.

ஆனால் தனது நம்பிக்கையை இழக்காத வேலாயுதன் பல கஷ்டங்களுக்கு இடையே நன்றாக படித்தார்.

இதையடுத்து வெற்றிகரமாக பிஎட் ஆசிரியருக்கான படிப்பை முடித்தார்.

ஆனாலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து வாழ்க்கை நடத்த கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து அவர் லொட்டரி சீட்டுகளை விற்க ஆரம்பித்தார்.

இந்த சூழலில் கடந்த 2016-ல் பிஎஸ் தேர்வில் பங்கேற்ற வேலாயுதன் அதில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து அரசாங்க பள்ளியில் அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.

முன்னர் பார்வை இல்லாதவர்களை தேர்வு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் தான் இத்தனை வருடங்களுக்கு பின்னர் தடை தளர்த்தப்பட்ட பின்னர் அவர் தேர்வில் கலந்து கொண்டார்.

பல வருட கஷ்டத்துக்கு பின்னர் அவர் வாழ்க்கை சிறப்பாக உள்ளதோடு, திறமையான மாணவர்களை அவர் உருவாக்கி வருகிறார்.

இதோடு பாடல்கள் பாடுவதிலும் திறமையானவராக இருக்கும் வேலாயுதன் சிறந்த பாடகர் விருதையும் வாங்கியுள்ளார். இவர் பாடல்கள் யூ டியூப்பிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்