13 வயது சிறுமியை நண்பன் வீட்டுக்கு அழைத்து சென்று சீரழித்து வீடியோ எடுத்த காதலன்... அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

அந்த பகுதியில் ஈஸ்வரன், பாரதி என்ற இரு இளைஞர்கள் வசித்து வந்தனர்.

இதில் ஈஸ்வரன் சிறுமியிடம் அடிக்கடி பரிசு பொருள் வாங்கி கொடுத்து காதலிப்பதாக கூறி பழகி உள்ளார்.

இந்த நிலையில் சிறுமியிடம் திருமண ஆசை காட்டிய ஈஸ்வரன் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள அவனது வேறொரு நண்பர் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அதனை பாரதி வீடியோவாக பதிவு செய்த நிலையில், மயக்கம் தெளிந்து அழுத சிறுமியிடம் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர்.

வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி இருவரும் மூன்று மாதங்களாக தொடர்ந்து அந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 2015 அக்டோபர் 12ம் திகதி பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு 4 ஆண்டுகளாக தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ஈஸ்வரனுக்கு ரூபாய் பத்தாயிரமும், பாரதிக்கு ரூ.20 ஆயிரமும் அபதாரமாக விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்