திருமணமான 4 மாதத்தில் சொல்லாமல் கொள்ளாமல் மாயமான கணவன்... வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

வடமாநிலத்தை சேர்ந்த புதுப்பெண் தமிழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் பிரகினாஸ்தாய்தலா பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி ஷர்மாமண்டல் (28). இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த சடையகவுண்டன்புதூரில் இயங்கி வரும் தனியார் கொசுவலை நிறுவனத்தில் தங்கி அங்கேயே தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளனர்.

இதனிடையே சம்சுதீன் மனைவியிடம் எதுவும் சொல்லாமல் சொந்த மாநிலமான மேற்குவங்கத்திற்குச் சென்றாராம்.

இதனால் விரக்தியில் இருந்த ஷர்மாமண்டல் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்