நடிகைகளை அழைத்து வருகிறேன்... ஆசையை துண்டி இளைஞர் செய்த செயல்: வெளியான முழுப்பின்னணி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சினிமா நடிகைகளை அழைத்து வருவதாக ஆசை காட்டி ஆட்டோவை திருடிச் சென்ற நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த ஜாவித். ஆட்டோ ஓட்டுனரான இவர், ஓலா நிறுவனத்திற்கு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் ஓலா ஆப் மூலம் சாலிகிராமம் செல்ல வேண்டும் என்று கூறி, கிண்டி கத்திப்பாரா அருகே இருக்கும் நபர் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து ஜாவித் அங்கு சென்று அவரை ஆட்டோவில் சாலிகிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த நபர் தன்னுடைய பெயர் துரை எனவும், தான் சினிமா ஏஜெண்டாக இருப்பதாக ஆட்டோ ஓட்டுனர் ஜாவித்திடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அப்போது துரை, ஜாவித்திடம் படத்தில் சிறிய கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பு வந்தால் உங்களை அழைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தனக்கு துணை நடிகைகள் பலரையும் தனக்கு தெரியும், அவர்களில் சிலரை அழைத்து கொண்டு செல்லலாம் என்று ஆசையை தூண்டியுள்ளார்.

இதையடுத்து சாலிகிராமம் வந்த பிறகு, அருகில் உள்ள தேநீர் கடையில் ஆட்டோ ஓட்டுநரை இறங்க சொல்லி கூறி விட்டு, தெருவில் கடைசியில் உள்ள மூன்று துணை நடிகைகளையும் தான் அழைத்து வருவதாகவும் அதுவரை காத்திருக்க கூறிவிட்டு ஆட்டோவை துரை எடுத்துச் சென்றுள்ளார் .

நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாவித் அங்கு சென்ற பார்த்த போது, ஆட்டோவை ஏமாற்றி திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆட்டோவை ஏமாற்றி திருடிச் சென்ற நபரை தேடி வருகின்றனர் .

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்