திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்... காதலனுடன் ஓட்டம்! விசாரணையில் தெரியவந்த உண்மை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவர் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால், அவரை மீட்க பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த

20 வயது பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், திடீரென்று திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டில் இருந்து மாயமானார்.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாயமான பெண்ணை வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்காத காரணத்தினால், பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் மாயமான இளம்பெண்ணை செல்போன் எண் உதவியுடன் தேடி வந்தனர்.

அப்போது அந்த பெண், சுசீந்திரம் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இளைஞர் ஒருவருடன் சென்றிருப்பது தெரிய வந்தது.

அதன் பின் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பொலிசார் பேசிய போது, நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம்.

இது பற்றி பெற்றோரிடம் தெரிவிப்பதற்குள், அவர்கள் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டேன், எங்களை யாரும் தேட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் அந்த பெண்ணை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்