உணவாக இதைமட்டும்தான் தருகிறார்: மனைவியிடம் இருந்து விவாரத்து கோரிய கணவன்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில், தமக்கு வழங்கப்படும் உணவில் கட்டுப்பாடு விதித்ததால், மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் மீருட் பகுதியைச் சேர்ந்த நபருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.

திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார்.

இதற்கான காரணம் விசாரித்தபோதுதான் அங்கிருந்த அதிகாரிகளுக்கு வினோதமான அதிர்ச்சி காத்திருந்தது.

மனைவி, தனக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் லட்டு மட்டுமே கொடுப்பதாகவும், அதற்கு இடைப்பட்ட நேரத்தில் எதுவுமே கொடுப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்து மனைவியிடம் விசாரித்த அதிகாரிகள், 2 வேளைக்கு 8 லட்டு மட்டுமே சாப்பிட்டு வந்தால் கணவருக்கு நல்லது என மாந்திரீகர் ஒருவர் கூறியுள்ளார்.

அதனை கேட்டு சில மாதங்களாக கணவருக்கு லட்டு மட்டுமே கொடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு குறித்து தம்பதிகளுடன் கலந்து பேசிய அதிகாரி கூறுகையில், அந்த பெண் லட்டு சாப்பிட்டால் மட்டும்தான் கணவருக்கு நல்லது நடக்கும் என தீர்க்கமாக கூறுகிறார்.

அதனை தவிர வேறு எதையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்