வெளிநாட்டிலிருந்து வந்து மனைவியை பார்த்துவிட்டு கிளம்பிய கணவன்.. பின்னர் நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் உள்ளூரில் வசித்த மனைவி, தனது மாமியாருடன் சேர்ந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னையா ஆசாரி. இவர் தனது மனைவி தெய்வானை (58), மகன் லட்சுமணன், மருமகள் சரண்யா (25), மற்றும் பேரன் கார்த்திக் (2), எட்டு மாத குழந்தை பூஜா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இதில் லட்சுமணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை இவர்களின் வீட்டின் முன்பு மின்சார வயர் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் தெய்வானை அதனை மிதித்து விட்டார்.

இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கவனித்த அவரது மருமகள் சரண்யா உடனடியாக தனது மாமியாரை காப்பாற்ற முயன்று அவரை பிடித்தார். அப்போது சரண்யாவின் இடுப்பில் 8 மாத குழந்தை பூஜாவும், கையில் மகன் கார்த்திக்கும் இருந்துள்ளனர்.

இதில் சரண்யா மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் சுதாரித்துக்கொண்ட அவர் இடுப்பில் இருந்த தனது குழந்தையை தூக்கி வீசியதோடு கையை பிடித்திருந்த மகனையும் தள்ளி விட்டார்.

இதையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சரண்யாவும், தெய்வானையும் உயரிழந்தனர்.

தனது உயிர் போகும் நிலையிலும் கூட தனது சாமர்த்தியமான செயல்பாட்டால் தனது குழந்தைகளை காப்பாற்றிய சரண்யாவின் செயலை அந்த பகுதி மக்கள் மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

சரண்யாவின் கணவர் லட்சுமணன் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் தான் ஊருக்கு வந்து தனது குடும்பத்தை பார்த்துவிட்டு மீண்டும் அங்கு சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்