அப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்... நம்பி சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உறவினர் என்ற பெயரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் கொம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி.

இவர் தனது வீட்டருகில் உள்ள பள்ளிக்கு சென்று அங்கு, படித்து வரும் உறவினர் மகளான 9-ம் வகுப்பு மாணவியை தந்தை அழைத்து வர சொன்னதாக கூறியுள்ளார்.

வந்தவர் உறவினர் என்பதால் வகுப்பு ஆசிரியரும் அவரை நம்பி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் தன்னுடன் வந்த அந்த மாணவியை, அருகில் உள்ள தைலத்தோப்பிற்கு அழைத்துச் சென்ற ராஜீவ் காந்தி, அங்கு தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டனர். இதையடுத்து ராஜீவ் காந்தி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் மாணவி கூறி அழுத போது அதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ் காந்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்