வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மணமகளின் வீடு, நகைகள்: உள்ளூர் மக்களின் நெகிழ்ச்சி செயல்

Report Print Vijay Amburore in இந்தியா

கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுமணத்தம்பதியினருக்கு நிவாரண முகாமில் இருந்த பொதுமக்கள் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் திருமண வரவேற்பை ஆகஸ்டு 18 அன்று வயநாடு மாவட்டம் மெப்பாடியில் நடத்தவிருந்தனர். இருப்பினும், மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவுகளை அடுத்து இந்த திட்டத்தை தள்ளி வைக்க வேண்டியிருந்தது.

மணமகள் ரபியா மற்றும் அவரது தாய் ஜுமைலாத் ஆகியோர் வெள்ளத்தில் மூழ்கியிருந்த வீட்டிலிருந்து தப்பித்து நிவாரண முகாமில் தஞ்சமடைந்திருந்தனர். ஆபரணங்கள், உடைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அவர்களுடைய வீட்டுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது.

இதனால் தம்பதியினர் ஆசையாக ஏற்பாடு செய்திருந்த திட்டங்கள் அனைத்தும் சிதைந்துவிட்டன.

நிவாரண முகாமில் இருந்த மக்கள் இதனை தெரிந்துகொண்டதும் தம்பதியினருக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை, நிவாரண முகாம் அமைக்கப்பட்ட பள்ளியின் மாவட்ட நிர்வாகமும், பெற்றோர்-ஆசிரியர் சங்கமும் சேர்ந்து, பள்ளியில் ரபியா மற்றும் ஷாஃபி ஆகியோரின் வரவேற்பை நடத்தின.

விழாவில் உள்ளூர் எம்.எல்.ஏ சி.கே.சசீந்திரன், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.அஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் பல பரிசுபொருட்களை வழங்கினர்.

முகாமில் வசித்த மற்ற குடியிருப்பாளர்களுக்கும், தம்பதியரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் உணவு வாங்க நிதி ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் தம்பதியினருக்கு ஐந்து சவரனில் தங்கத்தில் பரிசு வாங்கி உதவ பணத்தை திரட்ட முடிவு செய்தது.

இந்நிகழ்ச்சி, மாநிலத்தில் உள்ள மக்கள் ஒன்று கூடி, கடினமான நேரத்தில் தங்கள் கவலைகளை மறந்துவிடுவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்