வெளிநாட்டிலிருந்து விமானத்தில் இரவில் ஊருக்கு வந்த தமிழக பெண்: உண்மையை காட்டிய புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டிலிருந்து தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விபூதி பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் விமானநிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருப்பூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது கைப்பையில் இருந்த விபூதி பாக்கெட்டில் 270 கிராம் எடை கொண்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் இரு தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டு ஜெயலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்