ராணி போன்று பார்த்து வந்த கணவனுக்கு மனைவி செய்த துரோகம்... பெண் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில், அவர் கணவரே நான் தான் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில், கடந்த மாதம் 14-ஆம் திகதி சாக்குமூட்டை தீயில் எரிந்துகொண்டிருந்தது.

அப்போது அதில் துர்நாற்றம் வீசியதால், இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் சாக்குமூட்டையை அணைத்து சோதனையிட்ட போது, அதில், ஒரு பெண் பிணம் முழுவதுமாக எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதனால் இது குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் எந்த துப்பும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் கரூர் மாவட்டம் தான் தோன்றிமலை பூங்காநகரை சேர்ந்த சிவசங்கரன்(47) என்பவர், கடந்த மாதம் 9-ஆம் திகதி தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் தனது மனைவி சூரியகுமாரியை (34) காணவில்லை என்று புகார் அளித்தார்.

அதன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து சிவசங்கரனும் மனைவியை தேடி அலைந்தார்.

பல்வேறு இடங்களில் பொலிசார் தேடியும் சூரியகுமாரி குறித்து அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சிவசங்கரனின் நடவடிக்கையில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன் பின் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் மனைவிக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்ததாகவும், அதுமட்டுமின்றி டிக் டாக்கில் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டதால் ஆத்திரத்தில் நான் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் வெளியான தகவலில், சிவசங்கரன் சொந்தமாக தொழில் செய்து வந்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, அவளை ராணி போன்று கவனித்து வந்துள்ளார்.

ஆனால் அவரோ இவருக்கு துரோகம் செய்துவிட்டு, பல ஆண்டுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். வாட்ஸ் ஆப்பில் எந்நேரமும் கண்ட ஆண்களுடன் தொடர்ந்து சாட் செய்து கொண்டே இருந்துள்ளார்.

இதனால் சிவசங்கரன் அவரை பல முறை கண்டித்துள்ளார். மனைவி சிவசங்கரின் பேச்சை துச்சமாக கூட மதிக்காமல், இஷ்டத்திற்கு இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிவசங்கரன், சூர்யகுமாரியை கொலைசெய்துவது ஒன்றுதான் தீர்வு என்றூ முடிவு செய்து வீட்டில் படுத்திருந்த அவளை அடித்து கொன்றுவிட்டு, உடலை மூட்டையா கட்டிக்கொண்டுபோய் திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் பகுதியில் எரிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், அப்படியே மூட்டையை வீசிவிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்