சசிகலாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? விடுதலை குறித்து வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவிருப்பதால், அவர் எப்படி இருக்கிறார், என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை சசிகலாவின் பிறந்தநாளின் போது, கட்சி நிர்வாகிகள் அவருக்கு பரிசுகளால் நிறையவைப்பர்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, தன்னுடைய பிறந்தநாளை(ஆகஸ்ட் 18) தண்டனைக் காலத்தின் ஒரு நாளாகவே கழித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவரின் பிறந்தநாள் வருவதால், சசிகலாவின் நெருங்கிய உறவினர்களிடம் சசிகலா தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து பிரபல தமிழ் ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.

அதில், அவர் தன்னை சந்திக்க வரும் உறவுகளிடம் கண்ணிலிருந்து நீர் வடிவது இன்னும் நிற்கவில்லை; சர்க்கரை நோயின் தாக்கமும் குறையவில்லை என்று உருக்கமாக பேசுவதாக கூறியுள்ளனர்.

விரக்தியான மனநிலையில் இத்தனை காலம் இருந்த சசிகலா, இப்போது கொஞ்சம் புத்துணர்வுடன் காணப்படுகிறார் எனவும், தினகரன் தரப்பினருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சில சொந்தங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

முதலில் எல்லாம் அனைவரிடமும் பேசாத அவர், இப்போது அவரே அனைவரையும் 15 நாட்களுக்க் ஒரு முறை அழைத்து பேசுகிறார்.

தினகரன் பற்றி அவர் எந்தக் கருத்தையும் சொல்வதில்லை. அவர்மீது வருத்தத்தில் இருக்கிறார். அரசியல் குறித்து தெளிவாகப் பேசுகிறார்.

அதுமட்டுமின்றி எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க நம் பக்கம் வந்துவிடும் என்று அவர் நம்புகிறார். ஒருவேளை, அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் ரஜினி எனக் கூட்டணி அமையும் நிலை வந்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரும்பாலான நிர்வாகிகள் நம்பக்கம் வந்துவிடுவார்கள். அப்படி ஒரு நிலைதான் எதிர்காலத்தில் வரும் என்று அவர் கணக்குபோடுகிறார்.

அதுமட்டுமின்றி ஜெயலலிதா மோடியுடன் நட்பாக இருந்தாலும், அவரை எதிர்த்தே களம் கண்டவர், இதனால் நாமும் ஜெயலலிதா வழிமுறையை தான் பின்பற்ற வேண்டும் என்பதில் தீவிரவமாக இருக்கிறார்.

பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் தொடரமாட்டார் என்பது தனக்கு தெரியும் எனவும் நான் வெளியே வந்தால் இப்போது எடப்பாடியின் அமைச்சரவையில் உள்ள பலரும் என்பக்கம் வந்துவிடுவார்கள் என்று அவர் சிலரிடம் பேசியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சசிகலாவின் விடுதலை குறித்து டெல்லி மேலிடத்தையும் சசிகலா தரப்பு சந்திக்க திட்டமிட்டு வருவதாகவும், டெல்லி மேலிடத்தின் மூலம் சசிகலாவின் விடுதலையை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்திக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்