பிழைப்புக்காக லொட்டரி விற்பனை: தத்தளிக்கும் கடவுளின் தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிறுவன்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் இரண்டாவது ஆண்டாக பெரு மழை, நிலச்சரிவால் கடும் சேதம் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் அவதிக்க்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கேரள மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் உதவிக்கரம் நீண்டு வருகிறது.

இந்த நிலையில் அனாதை சிறுவன், தமது சேமிப்பில் இருந்து ஒருபகுதியை கேரள மக்களின் துயரம் துடைக்க அளிக்க முன்வந்த சம்பவம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த தகவலை நடிகரான தனேஷ் ஆனந்த் தற்போது தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், சில நிமிடங்களுக்கு முன்னர் வினய் என்ற சிறுவன் அழைத்ததாகவும், தமது பேஸ்புக் பக்கத்தில் கேரள மக்களுக்காக உதவுங்கள் என குறிப்பிட்டிருந்ததை பார்த்து தொலைபேசியில் அழைத்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

தற்போது பாடசாலை படிப்பை முடித்துள்ளதாகவும், பெற்றோரை இழந்த பின்னர் கல்வி செலவுகளுக்காக லொட்டரி விற்பனை செய்வதாகவும்,

அருகாமையில் உள்ள கோவிலில் இருந்து மூன்று வேளையும் உணவு வழங்குவதாகவும், அதுவே தமக்கு போதும் எனவும்,

தற்போது ஓரு மாதம் சேமித்த பணம் தம்மிடம் இருப்பதாகவும் அதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த சிறுவன், நடிகரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளான்.

சிறுவனின் இந்த பேச்சைக் கேட்டு கண்கலங்கிய நடிகர், முடிந்தால் நாம் ஒன்றாக சென்று அந்த உதவியை வழங்கலாம் என அந்த சிறுவனிடம் உறுதி அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்