மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. உதவி செய்யாமல் அத்துமீறிய தந்தை, சகோதரன்!

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், 2018ம் ஆண்டு அவருடைய பெற்றோர் திருமணத்திற்கான வயது எட்டுவதற்கு முன்பே சிறுமியை ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அந்த நபர் தினமும் பாலியல் உறவுக்காக அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி அங்கிருந்து தாய் வீட்டிற்கு ஓடிவந்துள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து சிறுமியை அவருடைய தாய் பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளார். 60 வயது நபரிடம் பணம் பெற்றுக்கொண்டு பாலியல் தேவைகளை நிறைவேற்றுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் உதவி கேட்டு அவருடைய சகோதரனிடம் சென்றுள்ளார். ஆனால் சிறுமியின் சகோதரனும் அத்துமீறியதோடு, இதனை வெளியில் கூறினால் வெட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதேபோல சிறுமியின் தந்தையும் அத்துமீறி நடந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட 60 வயது நபரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்