திமுக தலைவர் ஸ்டாலின் மீது பாய்ந்தது வழக்கு

Report Print Basu in இந்தியா

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிப்வரி 4ம் திகதி நடந்த கிராமசபை கூட்டத்தில் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை சம்பவத்துடன் முதலமைச்சரை ஒப்பிட்டு பேசியது என மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தமிழக அரசாணையில் வெளியீடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வழக்கு மாற்றப்பட்டள்ளது. ஸ்டாலின் மீது தொடரப்பட்டுள்ள இரண்டு அவதூறு வழக்குகளும் விரவில் விசாரணைக்கு வர உள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்