கல்லூரியில் துவங்கிய பிரச்னை: மர்மங்கள் மறைந்திருக்கும் கொலை வழக்கு... ஆதங்கப்படும் பொலிசார்

Report Print Abisha in இந்தியா

திருத்தணியில் இரு தினங்களுக்கு முன் ஓட்டலினுள் சென்று மகேஷ் என்பவரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அதிர்ச்சிகர வாக்குமூலம் வழங்கி உள்ளனர்.

இது குறித்து பொலிசார் தெரிவித்திருப்பது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சிவகுருநாதன். இவரின் மகன் மகேஷ், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்துள்ளார். அப்போது அந்த வழித்தட மாணவர்களுக்கு `ரூட் தல'யாக மகேஷ் இருந்துள்ளார். அதே கல்லூரியில்தான் ஜப்பான் என்கிற விமல்ராஜ் தரப்பினரும் படித்துள்ளனர். கல்லூரியில் படிக்கும்போதே மகேஷ் தரப்பினருக்கும் ஜப்பான் தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்துள்ளது.

தொடர்ந்து இந்த மோதல் வாலிபால் விளையாட்டுப் போட்டி நடத்துவதிலும் தொடர்ந்துள்ளது. மகேஷ் தரப்பைச் சேர்ந்த ஒருவரை ஜப்பான் தரப்பினர் கொலை செய்துள்ளனர். இதற்குப் பழிவாங்க மகேஷ் தரப்பு, ஜப்பான் தரப்பினரைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளது. தொடர்ந்து நடந்த மோதலில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீஸார் மகேஷின் நண்பர்களைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக திருத்தணி நீதிமன்றத்திற்கு வந்த மகேஷ்-யை ஜப்பான் தரப்பினர் ஓடஓட விரட்டி ஓட்டலில் வைத்து கொலை செய்துள்ளனர்.

சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில் மகேஷ் கொலைவழக்கில் 5 பேரைக் கைது செய்துள்ளோம். கைதானவர்கள் மீது ஏற்கெனவே கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மகேஷ் கொலைக்குப்பின்னால் மேலும் சில மர்மங்கள் மறைந்திருக்கின்றன என தெரியவந்துள்ளது. அதாவது, இரண்டு தரப்பினரும் அடிக்கடி மோதி உயிர்ப்பலி ஏற்பட்டுவந்துள்ள நிலையில், உளவுத்துறை போலீஸார் சமீபத்தில் அறிக்கை ஒன்றை போலீஸ் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

அதில், ஜப்பான் விமல்ராஜ் தரப்பு, மகேஷைக் கொலை செய்யப்போகும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட பொலிசாரோ உளவுத்துறை அறிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் மகேஷ் கொலை செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஆதங்கப்படுகின்றனர். என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்