2 மாசம் தான் ஆயுள்..! சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க! கண்ணீர் விட்டு கதறிய நடிகை

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினகாந்திடம் உதவி கேட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில தினங்களுக்கு பிறகு ரஜினி தன்னை தொடர்புக்கொண்டு பேசிய உதவி செய்ததாக மற்றொரு வீடியோ பதிவிட்டார்.

தற்போது, சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த உதவி செய்ததை பலர் அரசியல் ஆக்குகிறார்கள். என்னை தவறான பெண்ணாக சித்தரித்து பலர் செய்தி வெளியிடுகின்றனர்.

இதனால், நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனக்கு இதயப்பிரச்சினை இருக்கிறது, 2 மாதம் தான் ஆயுள் அதற்குள் குடும்பத்திற்காக எதாவது நான் செய்ய வேண்டும். கமல், ரஜினி என யாரிடம் வேண்டுமானாலும் நான் உதவி கேட்பேன். அதை அரசியல் ஆக்குகிறார்கள்.

சீமானுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனது வாழ்கை சூழ்நிலையே மோசமாக மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக எழுதும் பலர் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் முன் குறிப்பிட்டது போல் அனைத்தையும் விளாவாரியாக எழுத்து வைத்து தற்கொலை செய்துக்கொள்வேன். உங்களுக்கு தான் பிரச்சினை.

எனவே, சீமான் நீங்கள் உங்கள் ஆதவாளர்களிடம் இனி என்னை தவறாக சித்தரித்து எழுதுவதை நிறுத்தும் படி கூற வேண்டும். அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்