பக்கெட்டில் நிரப்பி கைவிடப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள்: பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயல் வெளி ஒன்றில் பக்கெட்டில் நிரப்பிய மனித உடல் பாகங்கள் கைவிட்ட நிலையில் கிராம மக்கள் கண்டறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியிலேயே மனித உடல் பாகங்கள்பக்கெட்டில் நிரப்பிய நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் இருவரை கைது செய்துள்ளனர்.

வயல் வெளி அருகே பசுமாட்டை கட்டிவிட சென்ற பெண்மணி ஒருவரே இச்சம்பவத்தை பார்த்துள்ளார்.

இரண்டு பக்கெட்டுகள் மூடப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த வாளியில் மருத்துவமனையின் முகவரியும் அச்சிடப்பட்டிருந்ததால் பொலிசார் உடனே, தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளனர்.

இதில் கோட்டயம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து புதைப்பதற்காக அளிக்கப்பட்ட உடல் பாகங்களை, அந்த மருத்துவமனை ஊழியர்கள் வயல் வெளியில் கைவிட்டுள்ளனர்.

தற்போது அந்த மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டுமின்றி இவர்கள் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் வாகனத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

கோட்டயம் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்த 80 வயது முதாட்டி ஒருவரின் உடல் பாகங்களே அவை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலை பதப்படுத்திய பின்னர், அப்புறப்படுத்தப்பட்ட உடல் பாகங்களையே அந்த மருத்துவமனை ஊழியர்கள் வயல் வெளியில் கைவிட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்