தமிழக மக்களுக்கு சீமான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை ! என்ன நடக்கபோகிறது?

Report Print Basu in இந்தியா

காஷ்மீரை தொடர்ந்து தமிழகத்தை இரண்டாக பிரித்து, சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என சீமான் எச்சரித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ம் திகதி ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வரும் காஷ்மீரில் சுமார் 4 ஆயிரம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை பெயர் வெளியிட விரும்பாத நீதிபதி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளை அரசியல் தலைவர்கள் பலர் கடும எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காஷ்மீர் விவகாரத்தை மேற்கோள் காட்டி தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீமான் கூறியதாவது, காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரிப்பாகர்கள். சென்னையை புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என சீமான் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்