தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கைக்குழந்தையுடன் கதறி அழும் மனைவி!

Report Print Vijay Amburore in இந்தியா

நெல்லை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு முத்துமாரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று சரியாக இரவு 9.40 மணியளவில் ,மணிகண்டன் தன்னுடைய நண்பர்கள் கணேசன் மற்றும் சரவணனுடன் அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் அரிவாள்களுடன் வந்த மர்ம நபர்கள் 6 பேர், திடீரென மணிகண்டனின் காலில் ஓங்கி வெட்டியுள்ளனர். ஒரு கால் துண்டானதால் அங்கிருந்து ஓட முடியாமல் திணறிய மணிகண்டனின் கழுத்தில் மற்றொரு நபர் வெட்டியுள்ளார்.

இதில் அவருடைய தலை துண்டாக விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். இதனை பார்த்த மற்ற இருவரும் லேசான காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மணிகண்டனின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்கள் இப்பகுதியை கடக்கும் போது, மணிகண்டன் சாதி பெயரை சொல்லி கேலி செய்திருப்பதாகவும், சாதித் தலைவருக்கு ப்ளக்ஸ் வைத்து கிழிக்கப்பட்ட பிரச்சனையில் மணிகண்டன் சிலரை தாக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...