நான் இருக்கேன்மா மகனா... தமிழக தாயாருக்கு சோமாலியாவில் இருந்து வந்த குரல்: நெகிழ்ச்சி சம்பவம்!

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில் கணவரால் கைவிடப்பட்டு மகனும் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நிலையில் தவித்து வந்த தாயார் ஒருவருக்கு சோமாலியாவில் இருந்து நெகிழ்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயதான சண்முகம். இவருக்கு 19 வயதில் மனைவியும், 10 மாத குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், சண்முகம் கடுமையான சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சண்முகத்தின் தாய் லட்சுமியை விட்டுவிட்டு, சண்முகத்தின் தந்தை பிரிந்து சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

சண்முகத்தின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்துள்ளது அவரது குடும்பம்.

சண்முகத்தின் துயரத்தை வாரப்பத்திரை ஒன்று கட்டுரையாக வெளியிட, தன்னார்வத்துடன் சாதிக் அலி என்பவர் முன்வந்து மருத்துவமனையில் சேர்த்து உதவினார்.

பேஸ்புக்கிலும் இதுதொடர்பில் பதிவிட, சாதிக் அலியின் சோமாலியா நண்பர் முகமது உசேன், போன் செய்து என்ன பிரச்சனை என விசாரித்துள்ளார்.

இதனையடுத்து உசேன், சண்முகத்தின் அம்மாவிடம், ‘கவலைப் படாதீர்கள். நாங்கள் எங்கள் தர்காவில் பிரார்த்திக்கிறோம். உங்கள் மகன் மீண்டு வருவார்’ என ஆறுதல் கூறி, 3800 ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி சண்முகம் இறந்ததைக் கேட்டு உசேன் உருகியதோடு, ‘அல்லா அவரை தன்னுடன் எடுத்துக்கொண்டுவிட்டார் போலும்,

நான் இருக்கிறேன் உங்களுக்கு மகனாக, வேண்டியதை நான் செய்கிறேன்’ என சாதிக் அலி மூலமாக உசேன் சண்முகத்தின் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

உசேன் இப்படி ஆறுதலாக பேசியுள்ளது லட்சுமி மற்றும் அவரது உறவினர்களை நெகிழ வைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்