ஆபாச வார்த்தையால் திட்டிய காதலன்.. தூக்கில் தொங்கிய காதலி! கடிதம் சிக்கியது

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் ஆபாசமான வார்த்தையால் காதலன் திட்டியதால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமார்- பவானி, இவர்களது மகளான வளர்மதி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வளர்மதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதைப் பார்த்த பவானி கதறித் துடித்தார்.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டை சோதனையிட்டதில் கடிதமொன்று சிக்கியது, அதில் புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாகவும், ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் எழுதியிருந்தார்.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் சொந்த பந்தங்கள் மணிகண்டனை கைது செய்யுமாறு போராட்டத்தில் குதித்தனர், இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொலிசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்