காத்திருங்கள், வந்துவிடுகிறேன்... 26 வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்: நடுங்க வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சென்னையில் 29 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆட்டோவில் சென்ற இளைஞர் ஒருவர், 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வர் ராவ்(32) என்பவர் பொறியியல் பட்டதாரி. சென்னையில் குடியிருக்கும் அவர், அப்பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் திருவான்மியூர் நியூ பீச் பகுதிக்குச் சென்ற ஈஸ்வர் ராவ், அங்கிருந்து ஆட்டோவில் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரில் அமைந்துள்ள 29 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் ஆட்டோ சாரதியிடம், காத்திருங்கள், வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார். ஈஸ்வர் ராவ் வருகைக்காக ஆட்டோ சாரதியும் காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ஈஸ்வர் ராவ் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, அடுக்குமாடியின் 26வது மாடிக்குச் சென்ற ஈஸ்வர் ராவ், திடீரென அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவசர சேவைக்கும் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், ஈஸ்வர் ராவ்வை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார்,

அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது எனவும், உறவினர்களும் அவரை கண்டுகொள்வது இல்லை என்பதாலும், விரக்தியில் இருந்த அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், முழுமையான விசாரணைக்கு பின்னரே இது தொடர்பான தகவல் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்