வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்... 4 நாட்களாக தந்தையை தேடி அலைந்த பிள்ளைகள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் தந்தையை காணவில்லை என புகார் அளிக்க சென்ற மகனுக்கு, பொலிசார் அளித்த தகவல் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பெரு மழைக்கும் நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 100 கடந்துள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு தன்னார்வலர்கள் பலர் முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையிலேயே கும்மனம் பகுதியில் குடியிருக்கும் 58 வயதான தம்பி என்பவரும் தமது குடியிருப்பில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.

ஆனால் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார்.

மருத்துவமனை செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு தம்பி அங்கேயே விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அவரது நிலை அப்போது கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக அவரை இருதய நோய்க்கான சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கே அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரிடம் இருந்து தகவல் ஏதும் பெற முடியாத நிலையில், அடையாளம் தெரியாத சடலங்களின் பட்டியலில் இணைத்து சவக்கிடங்கில் பாதுகாத்து வந்துள்ளனர்.

இதனிடையே நான்கு நாட்கள் கடந்தும் தந்தை குடியிருப்புக்கு திரும்பாதது கண்டு அவரது பிள்ளைகள் பொலிசாரை நாடியுள்ளனர்.

அப்போதே அதிரவைக்கும் இந்த சம்பவம் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்