அன்று தெருவில் குப்பை பொறுக்கிய சிறுவன்.. இன்று அந்த 30 பிரபலங்களில் இவரும் ஒருவர்!

Report Print Kavitha in இந்தியா

டெல்லி தெருவில் தங்க இடமின்றி அவதிப்பட்ட இளைஞர் ஒருவர் , ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விக்கி ராய் என்ற இளைஞரே புகைப்பட கலைஞராக மாறி ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

விக்கி ராய் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து 6 சகோதர சகோதரிகள் உடன் வளர்ந்து வந்துள்ளார்.

இவர் ஏழ்மையான நிலை மட்டுமின்றி தாயின் கொடுமை, மற்ற குழந்தைகளுடன் விளையாடக் கூட முடியாத சூழலில் இருந்தார் இவர். பெற்றோர்கள் வேலை தேடி செல்லும்போது தன் தாத்தா பாட்டியின் பார்வையில் வளர்ந்தவர்.

விக்கி 1999ல் 11 வயதாக இருந்தபோது தனது மாமாவிடமிருந்து 900 ரூபாயை எடுத்துக்கொண்டு மும்பையில் வீட்டை விட்டு வெளியேறி பிழைப்புக்காக டெல்லி வந்துள்ளார்.

அங்கு உணவு, தங்க இடமின்றி அவதிப்பட்ட அவர், ரயிலில் குடிநீர் விற்றும் உணவகத்தில் பாத்திரம் கழுவி அங்கு மீதமாகும் உணவை சாப்பிட்டும் வாழ்க்கையை ஓட்டியுள்ளார்.

டெல்லி வந்து விக்கி இடம் புரியாமல் ரயில் நிலையத்தில் அலைந்துக்கொண்டு இருந்த விக்கியை அங்கிருத்த தெருவோரக் குழந்தைகள் SBT இல்லத்தில் சேர்த்தனர்.

இருப்பினும் அந்த இடமும் அவரை பூட்டி முன்னேற்றத்திற்கு எந்த வழியையும் காட்டவில்லை என்பதால் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து இராண்டாம் முறையாக ஓடிவந்து ரயில் நிலையத்தில் சந்தித்த குழந்தைகளுடன் இணைந்து குப்பை பொறுக்கச் சென்றுவிட்டார்.

அதன்பின் ‘சலாம் பாலக்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் காப்பகத்தில் தங்கி பள்ளி படிப்பை தொடர்ந்தார்.

அங்கு, தனக்கு அறிமுகமான பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் ஒருவரின் கலைப்படைப்பில் ஈர்க்கப்பட்டு, தெருவோர மக்களின் வாழ்க்கை சார்ந்த புகைப்படங்களை எடுக்க விரும்பினார்.

விக்கியின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தொண்டு நிறுவனம், அவரது 18வது வயதில் சிறிய கேமராவை பரிசளித்து, கலைப்படைப்புக்கு வித்திட்டது.

அதன்பின் தனது லட்சியத்தை நோக்கி பயணித்த அவர், ‘ஸ்ட்ரீட் ட்ரீம்ஸ்' என்ற புகைப்பட கண்காட்சி நடத்தி, அதன் மூலம் பிரபலமாகி பல விருதுகளை குவித்தார்.

தற்போது உலக அளவில் பிரபலமாகியிருக்கும் விக்கி ராய், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ‘30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்