சினிமாவை மிஞ்சிய கொடூர கொலை!... குளத்தில் ஊறவைத்து ரத்தத்தை வெளியேற்றிய பயங்கரம்

Report Print Abisha in இந்தியா

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமூகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு கடம்பாக்கம் செல்லும் சாலையில் குளக்கரையில், புல்வெளி பகுதியில் கொடூரமாக சிதைக்கப்பட்டு ஆண்சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அவர் உயிருடன் இருக்கும் போது கொடுரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதும், கால்கள் நடக்க முடியாத வகையில் வெட்டப்படிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கால்துறையினர், கொலை செய்யப்பட்டவர் விடுதலை சிறுத்தை கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஹைட் வேலு என்பது தெரியவந்தது.

சூனாம் பேடு காலனியில் வசித்து வந்த வேலு மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்ற நிலையில் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வேலு மீது பிரபல தொழில் அதிபர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்த வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.

முன்னதாக கைது செய்யப்பட்ட வேலுவிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மட்டுமே கைப்பற்ற முடிந்த நிலையில் ஜெயிலுக்கு சென்று விட்டு வந்த பின்னர். வேலு அந்த பகுதியில் உப்பை பாக்கெட்டில் அடைத்து விற்கும் நிறுவனத்தை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார்.

அதே நேரத்தில் கொள்ளையடித்து சென்ற பணத்தில் பெரும்பகுதியை வைத்துக் கொண்டு வசதியாக வாழ்ந்துவரும் ஹைட் வேலு மீது உண்டான ஆத்திரத்தில் பழிக்கு பழியாக கூலிப்படையை ஏவி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகித்துள்ளனர்.

அதோடில்லாமல் பங்கு பிரிப்பதில் தகராறு என்றால் இந்த அளவுக்கு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. இரு சக்கர வாகனத்தில் சென்ற வேலுவை கடத்திச்சென்ற கும்பல் அவரை கட்டிபோட்டு இரு கால்களின் முட்டு பகுதிகளில் நரம்புகளை துண்டாக வெட்டி நடக்க விடாமல் செய்துள்ளது. பின்னர் அவரது தலை மற்றும் முகத்தை அரிவாளால் கொத்துக்கறி போல சரமாரியாக வெட்டி சிதைத்து அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளனர்.

சில மணி நேரம் குளத்தில் போட்டு ஊறவைத்து உடலில் இருந்து ரத்தம் வழிந்த பின்னர் குளக்கரையில் தூக்கிபோட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். அவர் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை கூட எடுக்கவில்லை என்பதால் கொள்ளையடித்த மீதி பணம் எங்கு உள்ளது என்று கேட்டு சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அந்த கொள்ளை சம்பவத்தில் கைதான வேலுவின் கூட்டாளிகள் குறித்தும், கொள்ளை சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்த தொழில் அதிபரின் பெண் தோழியின் பின்னணி குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்