திருமணமான இளம் பெண்ணுடன் முறையற்ற பழக்கம்... வீட்டை விட்டு வெளியேறி எடுத்த விபரீத முடிவு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் முறையற்ற பழக்கத்தால் இளம் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த கோவிலூர் கிராமத்தின் ஏரியில் சுமார் 25 வயதுடைய ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக அனக்காவூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், செய்யாறு தாலுகா விளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி அகிலா(24)-வுக்கும் சுரேசின் சித்தப்பா மகன் அய்யப்பனுக்கும் இடையே முறையற்ற பழக்கம் இருந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தான் அவர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்