நடுரோட்டில் பிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... ஒரே நாளில் என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, தற்போது பாலிவுட்டில் பாடும் அளவிற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

மேற்குவங்கத்தில் ராணுமோண்டால் என்ற பெண் அங்கிருக்கும் இரயில் நிலையம் மற்றும் சாலைகளில் பாட்டு பாடி பிச்சையெடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் இரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை அப்படியே ஸ்ருதி மாறாமல் பாடியுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால், ராணு ஒரே இரவில் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன், தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் ராணுவிற்கு ஒரு பாடல் பாட வாய்ப்பளித்துள்ளார். இதற்காக பிச்சையெடுத்து கொண்டிருந்த அவர் அழைத்துச் செல்லப்பட்டு, அழகு நிலையத்தில் வைத்து அவருடைய ஸ்டலையே அப்படியே மாற்றினர்.

இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், ஒரு சிலர் ஒரே நாளில் அடித்த இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்