ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா வெளியிட்ட பரபரப்பு ஓடியோ

Report Print Basu in இந்தியா

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது உயிருக்கு ஆபத்து என ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெ.தீபா வெளியிட்ட ஓடியோவில், ராஜா என்பராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். அதிகாரப்பூர்வ தகவலை காவல்துறையிடமும் கொடுக்க உள்ளேன்.

நான் இப்போது அரசியலைவிட்டு விலகிவிட்டேன் என்று தெரிந்ததும் பலரும் என்னை துன்புறுத்தி, தொல்லைக் கொடுத்து இரவு பகல் என்றுக்கூட பாராமல் தூங்க விடாமல் எனக்கும், எனது கணவருக்கும் மிரட்டல்களும் அச்சறுத்தல்களையும் விடுத்து வந்தனர். அதற்குத்தான் காவல் ஆணையரிடம் புகார் தர வேண்டும் என்று அன்று ஒரு செய்தி வெளியிட்டேன்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இதனை வெளியிடுகிறேன். இதில் யார் யார் என்ன செய்தார்கள் என்ற ஆதாரங்கள் என்னால் கொடுக்க முடிந்தது. மொத்தத்தில் எங்களை வீழ்த்த வேண்டும் என ஒரு கூட்டு சதி நடக்கிறது.

என்னை என் கணவரிடம் இருந்து பிரித்துவிட்டு எப்படியாவது என்னையும் தனிமைப்படுத்தி ஏதோ செய்ய வேண்டும் என்று சதி திட்டம் அவர்களிடம் இருக்கிறது.

நிரந்தரமாக என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்தையே நான் இழந்துவிட வேண்டும் என என் மேல் வீண் பழி சுமத்தி கெட்ட பெயர் உருவாக்க வேண்டும், மக்களிடம் எனக்கு நல்ல பெயரோ, நல்ல எண்ணமோ இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம். இதை யார் செய்கிறர்கள் என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என பேசியிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்