வெளிநாட்டில் சொகுசான வாழ்க்கை! கோடிக்கணக்கில் பணம்... வசமாக சிக்கிய தமிழ் பெண் குறித்த அதிரவைத்த தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சிலைக்கடத்தல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தமிழ் பெண் சென்னை விமானத்தில் பொலிசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

2016-ஆம் ஆண்டில் சிலைக்கடத்தல் புகாரில் தீனதயாளன் என்பவரும் அவரது கூட்டாளியான புஷ்பராஜனும் கைது செய்யப்பட்டனர்.

தீனதயாளனின் வீடு மற்றும் கிடங்கிலிருந்து ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தன் பங்குக்கு 14 சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார் புஷ்பராஜன்.

இதோடு புதுச்சேரியைச் சேர்ந்த மரிய தெரசா என்பவரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்தச் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக களமிறங்கிய பொலிசார் மரிய தெரசா வீட்டை சோதனையிட்டது.

அவர் வீட்டு கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 பழங்கால சாமி சிலைகள் சிக்கின. எஞ்சிய 3 சிலைகளோடு சேர்த்து மரிய தெரசாவையும், அவரது கணவர் விஜய்யையும் காணவில்லை.

பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மரிய தெரசாவும் விஜயும் பிரான்சுக்கு தப்பிய நிலையில் அங்கு சொகுசாக வாழ்ந்துள்ளனர்.

தப்பியோடிவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தால் அவர்களைப் பிடிப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனினும் காவல்துறையின் முயற்சிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே தற்போது பலன் கிடைத்துள்ளது.

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த மரிய தெரசா விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளிடம் நேற்று சிக்கிக்கொண்டார். இதையடுத்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை முடிவில் மரிய தெரசாவின் மோசடிகள் குறித்து மேலும் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்