வீட்டில் தனியாக இருந்த மாணவி! அதை தெரிந்து கொண்டு நைசாக உள்ளே நுழைந்த நபர்.. அங்கு வந்த பாட்டி கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பெற்றோரை இழந்து பாட்டியுடன் வசித்த இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்னஸ்ரீ (18). இவர் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வசித்து வந்தார்.

ரத்னஸ்ரீ கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக வமிசெட்டி என்ற இளைஞர் அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெங்கம்மா வெளியில் சென்றிருந்த நிலையில் ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட வமிசெட்டி ரத்னஸ்ரீ வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி விட்டு சென்றார்.

இதனால் பயந்து போன ரத்னஸ்ரீ வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்த நிலையில் சுயநினைவை இழந்து மயங்கினார்.

பின்னர் வீட்டுக்கு வந்த வெங்கம்மா தனது பேத்தி தரையில் சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு ரத்னஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு ரத்னஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வெங்கம்மா பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்