காஷ்மீரில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்.. அம்பானியின் முக்கிய அறிவிப்புகள்

Report Print Basu in இந்தியா

மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.

அவர் பேசியதாவது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேங்களின் மேம்பாட்டுக்கு சிறப்பு பணிக்குழு உருவாக்கப்படும். இதற்கான சிறப்பு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அம்பானி உறுதியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ரிலையன்ஸ் கார்ப்பரேட் குழு எடுத்த பெரிய முடிவு இதுவாகும்.

மேலும் பேசிய அம்பானி, 18 மாதங்களில் கடன் இல்லாத நிறுவனம் என்ற பெயரைப் பெரும் வகையில் பாதை தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதம் 700 ரூபாய் விலையில் ஜியோ ஃபைபர் சேவை செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்படுகிறது.

ஹோம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். நொடிக்கு 100 எம்.பி இணையவேகத்தில் ஜியோ ஃபைபரின் அடிப்படை திட்டம் இருக்கிறது; நொடிக்கு 1 ஜி.பி இணையவேகம் வரையிலும் செல்லும். ஜியோ ஃபைபர் தொடக்க சலுகையாக 4K டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும்

இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வருவாய் 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது எந்த இந்திய நிறுவனமும் எட்டமுடியாத இலக்காகும் என முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்