உன் புருஷன் தான் முக்கியமா? என்னால இதை தாங்க முடியாது! பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மனைவி உமாசத்யா. இவர் சிறிய தள்ளுவண்டி உணவு கடைநடத்தி வருகிறார்.

அவர் கடைக்கு வாடிக்கையாளராக வந்த சண்முகத்துடன் உமாசத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த மாரிமுத்து மனைவியை கண்டித்த நிலையில் சண்முகத்துடன் பழகுவதை உமா சத்யா தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உமாசத்யா கடைக்கு குடிபோதையில் வந்த சண்முகம் அவரிடம், என்னிடம் எப்படி நீ பேசாமல் இருக்கிறாய். உனக்கு உன் புருஷன் தான் முக்கியமா? எனச் சண்டை போட்டவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமாசத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், உமாசத்யா உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் தப்பியோடிய சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில், உமா சத்யா என்னுடன் பழகுவதை தவிர்த்ததை தாங்கமுடியவில்லை.

என்னை மறந்து அவள் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக வாழலாம் என நினைத்து கொன்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்