திருமணமான ஒரு மாதத்தில் திடீரென மயங்கி விழுந்தது ஏன்? அதிர வைத்த புதுப்பெண்ணின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலூரை சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் மகேஷ்குமார் (32). இவர், அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகள் புவனேஸ்வரிக்கும் (25) கடந்த மாதம் 11-ம் திகதி திருமணம் நடந்தது. கணவனும் மனைவியும் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பைக்கில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்துவாச்சாரி நோக்கி வந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகேஷ்குமார் பைக்கை ஆட்சியர் அலுவலக மேம்பாலம் சாலையோரம் நிறுத்தினார்.

தொடர்ந்து கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி சத்தமாக பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென மகேஷ்குமார் மேம்பால சுவரின் மீது ஏறி நின்று கீழே குதித்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அணுகுசாலையில் தலைகீழாக வந்து விழுந்தார். இதில், மகேஷ்குமாரின் தலை பிளந்து ரத்தம் கொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து புவனேஸ்வரி கதறி அழுத நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து புவனேஸ்வரி ஆட்டோவில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியில் மயக்கமானார்.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாரின் விசாரணையில், மகேஷ்குமார் ராணுவத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை சுந்தரேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து மகேஷ்குமாருக்கும், உறவினர் பெண் புவனேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்காக மகேஷ்குமார் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் தான் மகேஷ்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது புவனேஸ்வரிக்கு தெரிய வந்துள்ளது.

அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த மகேஷ்குமார் இருவரும் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனைவியிடம் கூறி உள்ளார்.

அதனை புவனேஸ்வரி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மகேஷ்குமார் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், இந்த அதிர்ச்சியில் தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.

இந்த அனைத்து விவரங்களையும் புவனேஸ்வரி தங்களிடம் வாக்குமூலமாக அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...