சீமானின் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய நிலை என்ன? வேலூர் தேர்தலில் வெளிச்சத்திற்கு வந்தது உண்மை

Report Print Basu in இந்தியா

வேலூர் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்த நிலையில், அக்கட்சியின் வாக்கு எண்ணிக்கை கடந்த தேர்தலை விட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 5-ஆம் திகதி நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முடிவு நேற்று வெளியானது இதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளையும் பெற்றனர். சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.அதுமட்டுமின்றி நோட்டாவிற்கு 9,417 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூரின் ஆறு தொகுதிகளில் சேர்த்து 5233 வாக்குகள் பெற்ற நாம்தமிழர் கட்சி, இம்முறை வேலூர் மக்களவை தேர்தலில் 26,995 வாக்குகள் பெற்றுள்ளது.

வேலூரில் 2016 ஆம் ஆண்டை விட 2019 ஆம் அண்டு நாம் தமிழரின் வாக்கு எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாக்களித்த 26955 உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்